மதுரை காஸ் குடோன் அருகே தீ விபத்து: விரைந்து தீயை அணைத்த தீயணைப்புத்துறையினர

கேஸ் குடோன் அருகே பற்றிய தீ உடனடியாக வந்த அனைத்து தீயணைப்புத் துறையினர்
கேஸ் குடோன் அருகே பற்றிய தீ உடனடியாக வந்த அனைத்து தீயணைப்புத் துறையினர் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
மதுரை மாவட்டம், மாடக்குளம் பிரதான சாலையில் உள்ள அரசினர் மாணவர் விடுதி அருகே எரிவாயு சிலிண்டர் குடோன் உள்ளது.இதன் அருகே உள்ள, திறந்த முள் மற்றும் குப்பைகள் அடர்ந்த வெளிப்பகுதியில் திடீரென தீயானது பற்றி எரிந்ததால், பரபரப்பாக காணப்பட்டது.
எதிரே அடுக்குமாடி அருகில் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள் தகவல் அளித்ததன் பேரில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் பாலமுருகன் தலை மேலான தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து தீய அணைத்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.நேற்றைய தினம் இதே பகுதிக்கு அருகில் கார் உதிரி பாகங்கள் இருக்கக்கூடிய நிறுவனத்தில் தீ பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது.
7.21 கோடி மக்கள் தொகையுள்ள தமிழகத்தில் 318 தீயணைப்பு நிலையங்களும் சுமார் 7 ஆயிரம் தீயணைப்பு வீரர்களும் உள்ளனர். ஆண்டுக்கு சராசரியாக சுமார் 10 சதவீத தீ விபத்துகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இதற்கேற்றாற்போல தீயணைப்புத்துறை நவீனப்படுத்தப்படுவதில்லை என்று புகார் கூறப்படுகிறது.
மாநிலத்தில் கடந்தாண்டு 21,041 தீ விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன. இதில் 104 பெரியவை, 348 நடுத்தரமான வை, 20,589 சிறியவை. இந்த விபத்துகளில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். 96 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ரூ.98 கோடி மதிப்புள்ள சொத்துகள் நாசமாகியிருக்கிறது. ரூ.298 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டிருக்கின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2017-இல் தீ விபத்தில் சேதமடைந்த சொத்துகளின் மதிப்பு 127 சதவீதம் உயர்ந்துள்ளது.
நவீன கருவி இல்லை: பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்துகளுக்கும், இப்போது ஏற்படும் தீ விபத்துகளுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளன. ஆனால் தீ அணைக்கும் முறைகளிலும், தீ அணைக்கும் கருவிகளிலும் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. தீயணைப்புத்துறையை நவீனப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தினால் சேதங்களும் உயிரிழப்புகளும் தவிர்க்க முடியாததாக இருப்பதாக அத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக மின் கசிவு, வேதிப் பொருள்கள், சமையல் எரிவாயு கசிவுகளால் தீ விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், இவற்றை அணைப்பதற்கு தீயணைப்புத்துறையினரிடம் நவீன கருவிகள் இல்லை. தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படவில்லை. இதனால் இந்த தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்களும், உயிரிழப்புகளும் வேகமாக அதிகரித்து வருவதாக தீயணைப்புத்துறையினர் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu