திருநங்கைகளுக்கு உதவிய திரைப்பட வில்லன் நடிகர்.

திருநங்கைகளுக்கு உதவிய திரைப்பட வில்லன் நடிகர்.
X
மதுரையில் திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை திரைப்பட நடிகர் வழங்கினார்.

திருநங்கைகள் மற்றும் பார்வையற்றவர்களுக்கான கொரோன வைரஸ் இரண்டாம் அலை காரணமாக வேலையிழந்த பொது முடக்கம் காரணத்தால் தொழிலை இழந்த நபர்களுக்கு வில்லன் நடிகர் நலத்திட்ட பொருள் வழங்கினார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பராசக்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மாற்று திறனாளிகள், பார்வையற்றவர்கள் திருநங்கைகள் வசிக்கின்றனர்.

தற்போது, கொரோனா 2- வது அலை காரணமாக வேலை வாய்ப்பில்லாமல் மிகவும் சிரமப்பட்டனர். இது குறித்து, தகவலறிந்த பிரபல சினிமா வில்லன் நடிகர் ரம்மி செளந்தர் மனித நேயத்துடன் பார்வையற்றவர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட 63 பேர்களுக்கு அரிசி, மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.

தற்போது, வேலை வாய்பில்லாமல் வறுமையில் வாடிய திருநங்கை , மற்றும் பார்வையற்ற 63 பேக்கு வில்லன் நடிகர் ரம்மி செளந்தர் வழங்கிய பொருட்களை பெற்று சென்றனர். வில்லன் நடிகரின் மனிதாபா மான இந்த செயலை, இப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!