/* */

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம்: ஆட்சியர் தகவல்

வருகின்ற 26.5.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத் தெரிவித்தார்

HIGHLIGHTS

சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம்: ஆட்சியர் தகவல்
X

பைல் படம் 

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்; வருகின்ற 26.05.2023 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10. மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள், பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத், தெரிவித்து, அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாதந்தோறும் விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களைத் தவிர, பெரும்பாலும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை போன்ற விவசாயம் தொடர்புள்ள கருத்துகளை மட்டும் சுருக்கமாகத் தெரிவிக்குமாறு இக்கூட்டங்களுக்கு விவசாயிகள் அழைக்கப்படுகின்றனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தபால் மூலமும் செய்தித்தாள்கள் மூலமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கருத்துகளைக் கூற விரும்புவோர் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரையில் கணினியில் பதிவு செய்துகொள்ள வேண்டும். விவசாயிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க இந்த வாய்ப்பு மாவட்டம் தோறும் வழங்கப்படுகிறது.

இக்கூட்டங்களிலும் முந்தி பெயர் பதிவிடுபவர்களுக்குத்தான் பேச வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் பேசுவதற்கான சில நிமிடத்துளிகள் அதிகாரிகளால் வரையறுக்கப்பட்டிருக்கும். சில கோரிக்கைகளுக்குத் தீர்வும் கிடைக்கும். அதிகாரிகளை நேரில் சந்திப்பது, எழுத்து மூலமாக முறையீடுகளுக்கு ரசீது பெறுதல் என்று விவசாயிகளுக்குத் திருப்தி தரும் சில நடைமுறைகளும் உண்டு.

Updated On: 25 May 2023 7:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  2. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  5. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  6. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  8. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  10. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!