அதிமுக ஒன்றிணைந்தாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது
கே.வி. தங்கபாலு (பைல் படம்)
அதிமுகவினர் ஒன்றிணைந்தாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி தங்கபாலு.
சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி தங்கபாலு செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
ஈரோடு இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கை செயல்திட்டங்கள் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளது..தமிழக முதல்வருக்கு மக்கள் சிறந்த வரவேற்பு இருப்பதை இதன் மூலம் அறிந்தோம்.ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக மகத்தான நன்றியை தெரிவிக்கிறோம்.
இடைத்தேர்தலில், பணநாயகம் ஜெயித்துள்ளதாக ஜனநாயகம் தோற்றுப் போனதாக விமர்சனம் குறித்த கேள்விக்கு தோற்றுப் போனவர்கள் வழக்கமாக சொல்கின்ற குற்றச்சாட்டு தான் இது.ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் எங்கள் கூட்டணிக்கு வழங்கிய மக்கள் எதிர்க்கட்சிகளுக்கும் மக்கள் வாக்கு வழங்கியுள்ளனர்.
இதெல்லாம் பணம் கொடுத்து வாங்கிய வாக்குகள் அல்ல தெளிவானவர்கள் மிகுந்த சிந்தனை உள்ளவர்கள் நல்லவர்கள் என்பதன் அடிப்படையில் தான் இதை பார்க்க வேண்டும்.தமிழக மக்கள் மீது வடமாநிலத்தால் தாக்குதல் நடத்துவதாக வதந்தி வந்த வண்ணமே உள்ளது இது குறித்து கேள்விக்கு, தமிழக முதல்வர் இதற்கான தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தமிழக அரசின் மீது தவறான தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.அதனை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது என்பதனை முதல்வர் பட்டவர்த்தனமாக தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒன்றிணைந்தால் திமுக கூட்டணியை வீழ்த்தி விடுவோம் என்ற அதிமுகவினரின் கருத்துக்கு. அதிமுக ஒன்றிணைந்தாலும் ஒன்றிணைாமல் போனாலும், ஒருபோதும் எங்களது கூட்டணியை அதிமுக வீழ்த்த முடியாது. அது முடிந்து போன கதை.பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், பஞ்சாயத்து தேர்தல் என படிப்படியாக எங்கள் கூட்டணி மாபெரும் வெற்றியை மக்கள் வழங்கி உள்ளனர். இடைத்தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கிறார்கள்.அவர்கள் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லாதது தான் எங்கள் வெற்றியின் வெளிப்பாடு என கே.வி. தங்கபாலு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu