மதுரை மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
மதுரை மாநகராட்சி சார்பில் வைகை ஆற்று கரைப் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மேலும், மாநகராட்சி சுகாதார பிரிவின் மூலம் சாலைகளில் இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகள், குதிரைகள், நாய்கள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு மற்றும் மாநகராட்சி செல்லூர் பணிமனையில் உள்ள காப்பகத்தில் தொடர்ந்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி வார்டு எண்.43 மற்றும் 49 -க்கு உட்பட்ட வைகை தென்கரை சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது (ஒபுளாப்படித்துறை சந்திப்பு முதல் குருவிக்காரன் சாலை சந்திப்பு வரை) புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகள் மற்றும் நடைபாதைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கடைகளின் பழைய மரக்கட்டைகள், கதவு, ஜன்னல்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் 8 டிராக்டர்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றியதுடன் அந்தப்பொருட்கள் மாநகராட்சி பொது பண்டக சாலையில் ஒப்படைக்கப்பட்டது. இது போன்று மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இந்த நிகழ்வில், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) சுப்பிரமணியன், உதவி பொறியாளர் ஷர்பூதீன் மற்றும் மண்டலம் 4 ஆக்கிரமிப்பு அகற்றும் பணியாளர்கள் உட்பட மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu