லஞ்சம் பெற்றதாக மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது

லஞ்சம் பெற்றதாக மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது
X

கைது செய்யப்பட்ட மின்வாரிய வணிக ஆய்வாளர் பழனி முருகன்.

மதுரை திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் லஞ்ச ஒழிப்பு துறையால் மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்

மதுரை திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் லஞ்ச ஒழிப்பு துறையால் மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் மின் கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு மனு செய்துள்ளார்.அதற்கு மின்வாரிய|வணிக ஆய்வாளர் பழனி முருகன்,40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இத்தகவலை முனியாண்டி, லஞ்சம் ஒழிப்புத் துறையினருக்கு தகவல் அளித்தன் பேரில் , மின்வாரிய வணிக ஆய்வாளரிடம் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க சென்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் மின்சாரத்துறை வணிக ஆய்வாளரை கையும் களவுமாக கைது செய்து 40,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தனக்குச் சாதகமாக ஒரு காரியத்தைச் செய்து தருவதற்காக அதிகாரமோ செல்வாக்கோ உள்ளவருக்கு முறையற்ற வழியில் கொடுக்கும் பணம் அல்லது பொருள்; கையூட்டு லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்பது பொதுமக்களுக்கு தெரியாதா? என்பதுதான் விடை தெரியாத கேள்வியாகத் தொடர்கிறது.

Tags

Next Story