மாணவ, மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: அமைச்சர் மூர்த்தி தொடக்கம்

மாணவ, மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: அமைச்சர் மூர்த்தி தொடக்கம்
X

உயர்கல்விக்கானவழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி  வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.

Educational guidance program for students

"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் "கல்லூரி கனவு" என்ற தலைப்பில் மேல்நிலைக்கல்வி பயின்ற மாணவ மாணவியர்கள் உயர்கல்விக்கான வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்திதொடங்கி வைத்தார்.

மதுரை விரகனூரில், உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியில், பள்ளிக்கல்வித் துறை சார்பாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் "கல்லூரி கனவு" என்ற தலைப்பில் மேல்நிலைக்கல்வி பயின்ற மாணவ மாணவியர்கள் உயர்கல்விக்கான வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மாணவ மாணவிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த நிலையில் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற உயரிய நோக்கில் பிறமாநிலங்களுக்கு முன்னோடியாக திகழும் வகையில் "இல்லம்தேடி கல்வி" என்ற மகத்தான திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

அதன் தொடர்ச்சியாக, மாணவ, மாணவியர்கள் புத்தகப் படிப்பு மட்டுமல்லாது, தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் "நான் முதல்வன்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு தமிழில் தனித்திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும்இ சரளமாகப் பேசுவதற்கும் நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

மேல்நிலைக்கல்விப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தங்களது எதிர்காலம் குறித்த தெளிவான சிந்தனை இருந்திட வேண்டும். கல்வியில் உயர்ந்த கல்விதாழ்ந்த கல்வி என எதுவும் இல்லை.குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான பாடங்கள் தொடர்பான உயர்க்கல்வி வாய்ப்புகளை தேர்வு செய்திட வேண்டும். அத்துறையில் உள்ள புதிய தகவல்களையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் தொடர்ந்து கற்றறிந்திட வேண்டும்.

இதன் மூலம் தங்களது திறனுக்கேற்ற வேலைவாய்ப்புகள் தங்களை தேடி வரும். இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை நாடுவதோடு மட்டுமல்லாமல் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் தொழில் முனைவோர்களாகவும் உருவாகிட வேண்டும். அந்த வகையில் மேல்நிலைக்கல்வி படித்து முடித்த மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு துறைகளில் உள்ள உயர்க்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் "கல்லூரி கனவு" என்ற சிறப்பான இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. இதனை மாணவ மாணவிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் பி.மூர்த்தி .

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில், மாணவ , மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன் , மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல்,மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சூரியகலா கலாநிதி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.கார்த்திகா , மாவட்ட கல்வி அலுவலர் (திருமங்கலம்) பா.கோகிலா உட்பட அரசு அலுவலர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்