மதுரையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: ஆட்சியர் தகவ
மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 2022-2023-ஆம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ரூ.1000மும், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ரூ.3000மும், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ.400-மும், இளநிலை கல்விக்கு ரூ.6000மும், மற்றும் முதுநிலை கல்விக்கு ரூ.7000மும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஒன்பதாம் வகுப்புக்கு மேல் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையோடு கூடுதலாக வாசிப்பாளர் உதவித்தொகை 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ.3000மும் இளநிலை கல்விக்கு ரூ.5000 மும் மற்றும் முதுநிலை கல்விக்கு ரூ.6000மும் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இவ்வலுவலகத்தில் பெற்று தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல்,குடும்ப அட்டை நகல், மாணவர் மற்றும் பெற்றோர் ஃ பாதுகாவலர் பெயரில் உள்ள இணை சேமிப்பு கணக்கு வங்கி புத்தக நகல்,
விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட சான்றுகளுடன் இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மதுரை – 625 020-என்ற முகவரியில் விண்ணப்பிக்குமாறும், மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்.0452 2529695-ஐ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என, மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu