மதுரை அருகே அப்பளம் இட்டு வாக்கு சேகரித்த திமுக பெண் வேட்பாளர்

மதுரை அருகே அப்பளம் இட்டு வாக்கு சேகரித்த திமுக பெண் வேட்பாளர்
X

சிந்தாமணி 89வது வார்டில் அப்பளம் போட்டு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் கவிதா:

அப்பளம் உற்பத்தி செய்யும் கம்பெனியில் அமர்ந்து ஊழியர்களுடன் அப்பளத் தயாரிப்பில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.

மதுரை சிந்தாமணி 89வது வார்டில் அப்பளம் போட்டு திமுக வேட்பாளர் கவிதா வாக்கு சேகரித்தார்

பிப்19நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 89-வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா மாரியப்பன் சிந்தாமணி பகுதியில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்போது, அங்கிருந்த ஒரு அப்பளம் உற்பத்தி செய்யும் கம்பெனியில் அமர்ந்து ஊழியர்களுடன் அப்பளத் தயாரிப்பில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார். மாமன்ற உறுப்பினர் வேட்பாளர் தங்களுடன் அமர்ந்து அப்பளம் தயாரிப்பது உங்களுக்கு மகிழ்ச்சியையும் அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக அப்பளத் தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!