தேர்தலில் திமுக கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: முன்னாள் அமைச்சர்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்(பைல் படம்)
Madurai News Tamil -மூன்றரை லட்சம் பேர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்று திமுக அளித்த 187வது தேர்தல் வாக்குறுதி கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை ஆளுகிற அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி தினந்தோறும் நினைவு படுத்தி வலியுறுத்தி வந்தாலும் கூட, தேர்தல் வாக்குறுதிகள் இன்றைக்கு கிணத்திலே போட்ட கல்லாக காட்சி அளிப்பதை நாம் பார்க்கின்றோம்.
குறிப்பாக, திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஐந்தரை லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறினார்கள். குறிப்பாக, தமிழகம் முழுவதும் உள்ள மூன்றரை லட்சம் அரசு வேலை வாய்ப்புகளுக்கு இளைஞர்கள் நியமிக்கப்படு வார்கள் என்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் வாக்குறுதி எண் 187 ல் குறிப்பிடப்பட்டது. மேலும் , புதிதாக ஏறத்தாழ 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் மொத்தம் ஐந்தரை லட்சம் வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தனர். இன்றைக்கு வரை அந்த வாக்குறுதிகள் கிணற்றிலே போட்ட கல்லாகவே உள்ளது.
இன்றைக்கு, சமூக நீதிக்கு பேராபத்து வரக்கூடிய ஒரு நிலையில் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீடுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய அரசாணை எண் 115 யை முதல் முதலாக சட்டமன்ற எதிர் கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டிலே முதல் உரிமைக் குரலாக அரசாங்க எண் 115 ரத்து செய்ய வேண்டும், பாடுபட்டு கல்வி பயின்று கனவு நனவாகிற வகையில் வாழ்நாளெல்லாம் தன் அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வியறிவு பெற்று எப்படியாவது தன் குடும்பத்தில் ஒரு அரசு பணியை பெற்றுவிட வேண்டும் என்ற இளைஞர் களுடைய கனவை தகர்த்தெரியும் என்பதை குறிப்பிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இந்த பேராபத்தை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லி அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையும், காவலர் தேர்வு வாரியம் போன்ற அரசு இந்த தேர்வாணையங்கள் மூலமாக தான் நாம் இளைஞர்களை தேர்வு செய்து ஆட்களை தேர்வு செய்து நாம் அரசு பணியிலே நியமிக்கின்றோம். ஆனால், இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கையை தனியார் ஆள்சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்து வதற்கு அனுமதியளிப்பதே இந்த அரசாணை எண் 115யின் சாராம்சமாகும்.
கடந்த, மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழகத்தினுடைய நிதிநிலை அறிக்கையிலே நிதி அமைச்சர் தெரிவித்தி ருந்ததையொட்டி, ஓய்வு பெற்ற இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் ஐவர் அடங்கிய மனிதவள சீர்திருத்த குழுவை 18.10. 2022-ம் தேதியிட்ட 115 எண் கொண்ட அரசாணை மூலம் தமிழக அரசு இந்த குழுவை அமைத்துள்ளது.
அரசு ஊழியர்களின் பணித்திறனை மேம்படுத்தவும், அந்த நோக்கத்துடன் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறையில் மாற்றங்களை மேம்படுத்துவோம் என்று சொல்வது மேம்போக்கான வார்த்தைகளாக இருக்கிறது .இந்த 115 அரசாணை பார்ப்பதற்கு பசுவாகவும், ஆனால் உள்ளே புலியாக இருக்கக்கூடிய அந்த அரசாணையாகவே நாங்கள் பார்க்கிறோம்.
ஆள் தேர்வு முறையிலேயே, செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை மறைமுகமாக இதில் திணித்து தனியாரை உள்ளே நுழைப்பதன் மூலமாக சமூக நீதி கேள்விக்குறியாகி இருக்கிறது. பணியாளர்களை நியமனம் செய்தல் தனியார் நிறுவனங்கள்கள் மூலம் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு குத்தகை முறையிலேயே பணியாளர்களை பெறுதல் சில பணிகளுக்கு நேரடியாக நிரந்தர பணியாளர்களின் நியமிக்காமல் முதலிலே தற்கால பணியாளர்களாக நியமித்து தற்காலிக பணியாளர்களை பின்னால் அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பணி நியமனம் வழங்குதல் ஆகிய திட்டங்களை இது உள்ளடக்கியதாக இந்த அரசாணை 115யில் இருக்கிறது. இதை ஆறு மாத காலத்திலே இந்த சீர்திருத்த குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து நடைமுறைப்படுத்தபட்டால், இளைய சமுதாயத்தின் எதிர்காலம் இருளிலே மூழ்கும் இளைய சமுதாயத்தின் அரசு பணி என்கிற கனவு காணாமல் போகும், இனி அரசு பணியாளர் என்கிற ஒரு நிலையை தமிழ்நாட்டில் இல்லை என்கிற ஒரு நிலை உருவாகிவிடும் என்ற அச்சம் இளைய சமுதாயத்தை சூழ்ந்து இருக்கிறது .
இளைய சமுதாயம் விழித்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் இளைஞர்கள் எதிர்காலத்திற்காக, நன்மைக்காக, பாதுகாப்புக்காக உரிமைக்குரல் கொடுத்தார். இந்த ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு புதிதாக வெளியிடப்படும் அரசு அறிவித்திருப்பது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சி கிடைத்த வெற்றி .அவருக்கு கோடிக்கணக்கான இளைய சமுதாயத்தினர் நன்றியை தெரிவித்து வருகின்றனர். பசுத்தோல் போர்த்திய புலியாக வெளி வந்த அரசாணை 115யை தடுத்து நிறுத்தி இளைஞர்களை காத்தவர் எடப்பாடி பழனிசாமிதான் என்றால் அது மிகையாகாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu