/* */

வாக்கு சேகரிக்கும் தேமுதிகவினர்: தேர்தல் அறிவிக்கும் முன்பே 'வேகம்'

மதுரை மாநகராட்சி தேர்தலுக்கான பிரசாரத்தை தேமுதிகவினர், உற்சாகத்துடன் தொடங்கியுள்ளனர்.

HIGHLIGHTS

வாக்கு சேகரிக்கும் தேமுதிகவினர்: தேர்தல் அறிவிக்கும் முன்பே வேகம்
X

மதுரையில், வீடு வீடாக சென்று முரசு சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து, பிரச்சாரம் தொடங்கிய தேமுதிகவினர்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் சார்பாக, மாவட்ட செயலாளர் முத்துப்பட்டி பா.மணிகண்டன் தலைமையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்று தொடங்கப்பட்டது. அதன்படி, 6ம் பகுதிக்கு உட்பட்ட 52-வது வார்டில் மேல ஆவணி மூல வீதி பகுதியில் உள்ள வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். பொது குடிநீர் குழாயை அதிகப்படுத்தப்படும்; சுகாதார வசதி, ஏழை எளியோருக்கு ரேஷன், தெருவிளக்குகள் சீரமைப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை தேமுதிகவினர் வழங்கினர்.

அத்துடன், வரும் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்கு அளித்தால், தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று கூறி, வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்கி, வாக்குகள் சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தின் போது, மாவட்டச் செயலாளர் முத்துப்பட்டி பா. மணிகண்டனுக்கு, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், பொருளாளர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜாமணி,எஸ்வின் பாபு, பொதுக்குழு உறுப்பினர், ஜெயராமன், பகுதி செயலாளர்கள் மோகன், பத்மநாபன், தனபால், மாரியப்பன், மாணிக்கவாசகம், இப்ராஹிம், வார்டு வட்ட கழகச் செயலாளர் பால்பாண்டி . சந்தோஷ் அல்லு, பாலாஜி, சாஜித், கார்த்திகேயன், பாலாஜி, அசோக், சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஆர்க்டிக் பனி உருகலை தடுக்கும் ராட்சஷ வைரஸ்கள்..! விஞ்ஞானிகள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞாவரா அரிசி தெரியுமாங்க..? தெரிஞ்சுக்கங்க..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்!
  4. தொழில்நுட்பம்
    திரிஷ்னா: பிரான்சுடன் இஸ்ரோவின் கூட்டுப் பணி பற்றி அனைத்து தகவல்களும்
  5. அரசியல்
    அயோத்தியில் பாஜக தோல்வி. அரசியல் அதிர்ச்சி! எங்கே தவறு நேர்ந்தது? ஒரு...
  6. இந்தியா
    சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரணாவத்தை அறைந்த பெண் பாதுகாப்பு...
  7. குமாரபாளையம்
    மின் நிறுத்தத்தால் துவண்ட பொதுமக்கள் மழையால் கொண்ட மகிழ்ச்சி!
  8. தமிழ்நாடு
    போன முறை 39, இந்த முறை 40 - ஆனாலும் வடை போச்சே.... ஏமாற்றத்தில்...
  9. குமாரபாளையம்
    மேய்ச்சல் நிலமாக மாறிய காவிரி ஆறு
  10. குமாரபாளையம்
    பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் மரங்கள்! அப்புறப்படுத்த கோரிக்கை!