மதுரை அருகே, கீழமாத்தூர் ஊராட்சியில் குளறுபடிகள்?

மதுரை அருகே, கீழமாத்தூர் ஊராட்சியில் குளறுபடிகள்?
X

மதுரை அருகே கீழமாத்தூர் ஊராட்சி அலுவலகம்.

மதுரை அருகே, கீழமாத்தூர் ஊராட்சியில் குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கீழமாத்தூர் ஊராட்சி செயலாளர் மீது முறைகேடு மற்றும் ஆள்மாறாட்ட புகார்:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ மாத்தூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற கிளர்காக உள்ள கார்த்திகேயன் என்பவருக்கு பதிலாக, அவருடைய மனைவி கீதா என்பவர் கிராம சபை கூட்டங்களிலும், ஊராட்சி மன்ற உறுப்பினர் கூட்டங்களிலும் அதிகார தலையீடு செய்து வருவது சம்பந்தமாகவும் ,மேலும் கீதா என்பவர் தன்னை ஊராட்சி மன்ற உதவியாளர் என்றும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்றும் ஊராட்சி மன்ற கிளர்க் என்றும் முன்னுக்குப் பின் முரணாக தன்னை கூறி வருவதாகவும், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால், கீழ மாத்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் பஜிரா பானு என்பவர் மதுரை ஐகோர்ட கிளையில் வழக்குத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை 04 03 2024 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புஜராபானு கூறுகையில், கீழமாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக கார்த்திகேயன் உள்ள நிலையில் அவரின் மனைவி ஊராட்சி செயலாளராக தன்னை காட்டிக் கொண்டுஅனைத்து விஷயங்களிலும் தலையிடுகிறார் மேலும் கீழமாத்தூரில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வதோடு ஊராட்சிகளில் பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபடுகிறார் .இது குறித்து ,பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை .ஆகையால் ,முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் கீழ மாத்தூர் ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று கூறினார்.

Tags

Next Story