மதுரை; தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளில் அன்னதானம் வழங்கல்

மதுரை; தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளில் அன்னதானம் வழங்கல்
X

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளான இன்று அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுரை அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த தினம்: அன்னதானம் வழங்கல்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில், தேமுதிக கட்சியின் சார்பில் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சியினர் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 72 வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டப்பட்டு வருகின்ற சூழலில் பொதுமக்களுக்கு உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தேமுதிக கட்சியின் சார்பில், மாவட்ட பொருளாளரும் வழக்கறிஞருமான ரவிச்சந்திரன் தலைமையில், கட்சி நிர்வாகிகள் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் தின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இதில் தேமுதிக உசிலம்பட்டி நகரச் செயலாளர் அசோகன், மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் எம்.எஸ். மாணிக்கம், கருமாத்தூர் பாண்டி, ஒன்றியச் செயலாளர் சமுத்திர பாண்டி , முன்னாள் கவுன்சிலர் வாசகராஜா, சேடப்பட்டி ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் சிவபிராகாஷ், எழுமலை பேரூராட்சி செயலாளர் சேகர் , மாவட்ட விவசாய அணிச் செயலாளர் எம். எஸ். பாண்டியராஜன், கேப்டன் மன்ற துணைச் செயலாளர் வில்லாணி செல்வம் , நகரப் பொருளாளர் அழகுராஜா, மகளிர் அணி பாண்டியம் மாள் மற்றும் தேமுதிக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story