கூட்டுறவு சங்கங்களில் 40 கிராமுக்கு குறைவாக வைத்தவர்களுக்கு தள்ளுபடி அரசாணை: அமைச்சர்

கூட்டுறவு சங்கங்களில் 40 கிராமுக்கு குறைவாக வைத்தவர்களுக்கு தள்ளுபடி அரசாணை: அமைச்சர்
X

அமைச்சர் ஐ.பெரியசாமி

தீபாவளியை முன்னிட்டு நியாய விலை கடை ஊழியர்கள் அனைவரும் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும்

கூட்டுறவு சங்கங்களில் 40 கிராமுக்கு, குறைவாக அடகு வைத்தவர்களுக்கான தள்ளுபடி குறித்த அரசாணை இந்த வாரம் வெளியிடப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அமைச்சர் ஐ.பெரியசாமி மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மேலும் அவர் கூறியதாவது: கூட்டுறவு சங்கங்களில் 40 கிராமுக்கு, குறைவாக அடகு வைத்தவர்களுக்கான தள்ளுபடி குறித்த அரசாணை தயாராக உள்ளது. இந்த வாரம் வெளிவந்து விடும். அதைத் தொடர்ந்து, நகை உரிமையாளர்களிடம் கொடுப்பதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தீபாவளியை முன்னிட்டு நியாய விலை கடை ஊழியர்கள் அனைவரும் மூன்று நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். தமிழகத்தில் பொங்கலுக்கு பரிசு வழங்குவது வழக்கம். இதுகுறித்து, தமிழக முதல்வரும் உணவு துறை அமைச்சரும் ஆலோசித்து முடிவு செய்வார்கள் என்றார் அமைச்சர் ஐ.பெரியசாமி.

Tags

Next Story
ai healthcare products