சோழவந்தான் பெருமாள் கோயில் நடை திடீரென சார்த்தப்பட்டதால் பக்தர்கள் வருத்தம்
சோழவந்தான் ஜெனக பெருமாள் கோயில் நடைசார்த்தப்பட்டதால் காத்திருந்த பக்தர்கள்
சோழவந்தான் ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திடீரென நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருக்க நேரிட்டது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனக நாராயண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. பழமை வாய்ந்த இக்கோவிலில், இன்று காலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அதிக அளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில், திடீரென சுமார் பகல் 12 மணியளவில் நடை சார்த்தப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் கேட்டிற்கு ,வெளியே காத்திருந்த பக்தர்கள் உள்ளே இருந்த கோவில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்களை அழைத்து கேட்டபோது எங்களுக்கு வேறு வேலை இல்லையா என்று அலட்சியமாக பதில் சொல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர். சொர்க்கவாசல் திறப்பு நாளான இன்று பெருமாளை தரிசிக்க வந்த தங்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியதாக வருத்தத்துடன் தெரிவித்தனர்.
மேலும் திருவிழா காலங்களில் இதுபோல் குளறுபடிகள் அதிக அளவில் நடப்பதாகவும் இது குறித்து மாவட்ட இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் மற்றும் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் நேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும், கோவில் நடை யை சார்த்தி அரசுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுத்தியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.இனிவரும் காலங்களில், வைகுண்ட ஏகாதசி காலங்களில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடை சாற்றும் முறையை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu