திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற இந்து முன்னணியினர் கோரிக்கை

மதுரை திருப்பரங்குன்றம் மலை
திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற காவல்துறை அறநிலையத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு தர இந்து முன்னணி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள, மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற இந்து முன்னணியினர் பல்வேறு வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக வழக்கு தொடரப்பட்டு கோவில் மலை மீது தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படும் காவல்துறை மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபத்தை அறநிலையத்துறை சார்பில் ஏற்றப்படுகிறது. இதற்கு, இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று ஆர்ப்பாட்டம் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திற்கு அனுமதி வழங்கி மலைமீது ஏற்ற காவல்துறை மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். பழைய காலத்தில் மலைமீது தீபம் ஏற்றிய அமைப்பு அங்கு உள்ளது. ஒரு காலகட்டத்தில் முஸ்லீம் பயங்கரவாதிகள் தடுத்தன் விளைவாக, இந்த அரசாங்கம் தீபம் ஏற்றுவதை தடுக்கிறது. அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. நீதிமன்றம் தீபம் ஏற்ற அனுமதி அளித்தும், அறநிலையத்துறை அதிகாரிகள் நாத்திக அரசாங்கங்களும் இதனை தடுக்கிறது. தொடர்ந்து இதனை தடை செய்கிறது. இந்த ஆண்டு வரும் 18-ம் தேதி தீப தூணில் தீபம் ஏற்ற செயற்குழு கூடி முடி வெடுத்துள்ளோம்.
அதற்குள் அரசாங்கம் ஆய்வு செய்து அறநிலையத்துறை அதிகாரிகள் மேலே தீபம் ஏற்ற கோர்ட் உத்தரவை செயல்படுத்த வேண்டும். பொய்யான வரலாற்றை சொல்கிறாரகள் வாபரை ஐய்யப்பனுடன் தொடர்புபடுத்து கிறர்கள். ஆனால், ஐய்யப்பன் காலம் வேறு மலைமேல் தர்காவை அப்புறபத்த வேண்டும் என காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu