மதுரையில் தீபாவளியையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடை
மதுரையில் தீபாவளியையொட்டி ஏழை எளியவர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
மதுரை பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் தீபாவளியை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிர்வாக இயக்குனர் சுலோச்சனா தலைமையில், அழகப்பன் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து, நிர்வாக இயக்குனர் சுலோச்சனா கூறும்போது
தற்சமயம், உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா எனும் கொடிய வைரஸ் நோய்த் தொற்றினால் பொது மக்கள் பொருளாதார சூழ்நிலையில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
தற்சமயம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து தீபாவளியை மனமகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ எங்களது அறக்கட்டளை சார்பில் முதன்முறையாக குழந்தைகள்,முதியவர்கள்,பெண்கள் உள்பட பொதுமக்கள் சுமார் நூறு நபர்களுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகள் வழங்கியுள்ளோம்.மேலும், பொதுமக்களுக்கு பல்வேறு வகையில எங்களது அறக்கட்டளை சார்பில், தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற மகளிர் நீதி மன்ற மாவட்ட நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோசம்,சுப்ரமணியபுரம் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் சங்கீதாபூபாலன், 93- வது வார்டு குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் லயன் எம் எஸ் ராமகிருஷ்ணன், அன்னை தெரசா கல்லூரி தாளாளர் மருத்துவர் இரா.கண்ணன்,மாநகராட்சி உதவி பொறியாளர் கருப்பையா,எம்.ஏ.வி.எம்.எம்.மேல்நிலை பள்ளி செயலாளர் பொன்னம்பலம் பானுப்பிரியா,மற்றும் பாரதியார் நகர் விஸ்தரிப்பு (அழகப்பன்நகர்) குடியிருப்போர் நலச்ஙகத் தலைவர் வரதன் பொதுச் செயலாளர் கல்யாணகுமார் பொருளாளர் பழனி துணைத் தலைவர் ராமச்சந்திரன் உள்பட முக்கிய நிர்வாகிகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu