சோழவந்தான் அருகே குருவித்துரையில் அமைச்சர் சேகர் பாபு சுவாமி தரிசனம்

சோழவந்தான் அருகே குருவித்துரையில் அமைச்சர் சேகர் பாபு  சுவாமி தரிசனம்
X

சோழவந்தான் அருகே குருவித்துரையில் அமைச்சர் சேகர் பாபு சுவாமி தரிசனம் செய்தார்.

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் குருவித்துறை கோவில்களில் அமைச்சர் சேகர் பாபு சாமி தரிசனம் செய்தார்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் அருள்மிகு முத்தையா ஊர் காவல் சாமி மற்றும் பிரசித்தி பெற்ற குருவித்துறை குருபகவான் கோவில்களில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர், மன்னாடிமங்கலம் கண்மாய் அருகே உள்ள முத்தையா ஊர்காவலன் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்து, மரக்கன்றுகளை நட்டார். இதில், விவசாயப் பிரிவு வக்கீல் முருகன் ஒன்றியக் கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, பிரிவு செயலாளர் ஊராட்சி மன்றத் தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் அரசு அதிகாரிகள், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் ,கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் செல்லத்துரை ,துணை ஆணையர் பொன் சாமிநாதன் மற்றும் வருவாய் அலுவலர் சதீஷ் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குருவித்துறை கோவிலில் சாமி கும்பிட்டு வெளியே வந்த அமைச்சர் சுகாதாரப் பணிகளை முறையாக மேற்கொள்ளும்படி அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, மன்னாடி மங்கலம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வருகை புரிந்த அமைச்சருக்கு ஒன்றியக் கவுன்சிலர் ரேகா வீரபாண்டியன் தலைமையில் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு மண்டபம் கட்டித்தர அமைச்சரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சென்றார். அமைச்சருடன், அவரது மனைவியும் உடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil