மதுரை அருகே கவுன்சிலர் நூதனப் போராட்டம்
அலுவலகம் வாசலில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்.
மதுரை, திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் வாயில் கருப்பு துணியுடன் தரையில் அமர்ந்து 3 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டு வரும் ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம், ஒன்றிய அலுவலகத்தில், உள்ள வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலர் அறை முன்பு, வாயில் கருப்பு துணியுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வரும் விரகனூர் ஒன்றிய கவுன்சிலர் பார்த்திப ராஜன்.
விரகனுார் ஊராட்சி பகுதியில் காவேரி கூட்டு குடிநீர், சாலை, சாக்கடை போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளா வில்லை. இன்று விரகனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா விடம் நேரிடையாக புகார் செய்தும் கண்டு கொள்ள வில்லையாம்.
மக்களின் பிரதிநிதியான (ஒன்றிய கவுன்சிலர் ) பார்த்திபராஜன், தற்போது 3 மணி நேரமாக வாயில் கருப்பு துணியை கட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக ஒன்றியக் குழு தலைவர் நிலையூர் முருகன் வந்து கவுன்சிலர் பார்த்திபராஜனிடம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா விரகனூர் பகுதியில் இன்று மாலை ஆய்வு செய்வதாகவும் அடிப்படை பிரச்சனைகளில் உடனடியாக தலையிட்டு தீர்வு செய்வதாகவும் உறுதியளித்த என் பேரில் ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபராஜன் தனது தர்ணா போராட்டத்தை விளக்கிக் கொண்டார்.
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் பார்த்திப ராஜன் வாயில் கருப்பு துணி கட்டி திடீரென தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, அதிமுக ஒன்றிய குழுத்தலைவர் நிலையூர் முருகன் கூறுகையில், விரகனூர் ஒன்றிய கவுன்சிலர் பார்த்திப ராஜன் காவிரி கூட்டு குடிநீர் மற்றும் சாலை போன்ற அடிப்படை வசதிகள் குறித்து கூறியவற்றை வட்டார வளர்ச்சி அலுவலர் செயல்படுத்தவில்லை என்றும், மேலும் இன்று நடைபெறும் சிறப்பு ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்ள தகவல் தெரிவிக்கவில்லையாம். இதனை அடுத்து, பார்த்திபராஜன் போராட்டத்தில் ஈடுபட்டது. தற்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் இன்று மாலை 5 மணிக்கு பிறகு ஒரு பகுதிகளில் ஆய்வு செய்த வருவதாக உறுதி அளித்ததையடுத்து தற்போது இந்த பிரச்சனை முடித்து வைக்கப்பட்டது எனக் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu