மதுரையில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கிய பஞ்சு வியாபாரிகள்

மதுரையில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கிய பஞ்சு வியாபாரிகள்
X

திருப்பரங்குன்றம் பகுதியில் இனிப்பு வழங்கிய பஞ்சு வியாபாரிகள்.

வரியை நீக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து மதுரை பஞ்சு வியாபாரிகள் இனிப்பு வழங்கிய கொண்டாடினர்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் பகுதியில் ஏராளமான பஞ்சாலைகள் உள்ளது. இப்பகுதியில் பஞ்சாலையில் சேமிக்கப்படும் கழிவு பஞ்சுகள் விற்பனை செய்ய தமிழக அரசு வரி விதித்துள்ளது. இதனால் வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில், நடப்பு சட்டமன்ற தொடரில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், கழிவு பஞ்சு வியாபாரிகளுக்கான செஸ் (கலால் வரியை) நீக்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள கழிவுப் பஞ்சு வியாபாரிகள் தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story
free business card ai