மதுரைக்கு வந்த விமானப்பயணிக்கு கொரோனா தொற்று

துபையில் இருந்து மதுரை வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

துபையில் இருந்து மதுரை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் இன்று துபாய் மற்றும் கொழும்பிலிருந்து வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. துபையில் இருந்து வந்த 141 பயணிகளுக்கும் கொழும்பிலிருந்து வந்த 119 பயணிகளுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் துபையில் இருந்து வந்த சிவகங்கை மாவட்டம் , புதுார் பகுதியை சேர்ந்த நாகப்பன் மகன் கண்ணன் (39) என்பவருக்கு, கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவரை 7 நாட்கள் தனிமையில் வைக்க தமிழக சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். மேலும், அவருக்கு ஒமைக்கிரான் தொற்று உள்ளதா என அறிய சளி மாதிரி சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது..

Tags

Next Story