மதுரை அருகே 10 மணி நேரம் சிலம்பம் சுற்றி கொரோனா விழிப்புணர்வு

மதுரை அருகே 10 மணி நேரம் சிலம்பம் சுற்றி கொரோனா விழிப்புணர்வு
X

நான்கு மண் பானைகள் மீது நின்றுகொண்டு 10 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவி நிவாஷினி.

மதுரை அருகே மாணவ, மாணவிகள் கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி 6ம் வகுப்பு மாணவி 10 மணி நேரம் சிலம்பம் சுற்றி விழிப்புண்ர்வு ஏற்படுத்தினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மெற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுப்பற்காக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கொரானா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வலியுறுத்தி, மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் நிவாஷினி என்ற மாணவி நான்கு மண் பானைகள் மீது நின்றுகொண்டு 10 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

இவரது, உலக சாதனை முயற்சியை சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு அங்கீகரித்து அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவித்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!