மதுரை விமான நிலைய பெயர் மாற்றத்தால் கிளம்பிய சர்ச்சை..
Madurai Airport Name Change
Madurai Airport Name Change-மதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவதில் பல வருடங்களாக சர்ச்சை எழுந்து வந்த நிலையில், பல்வேறு சமூகத்தினர் அவர்களது சமூகத் தலைவர்களை பெயர் சூட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், இமானுவேல் சேகரன், முத்தரையர் என பெயர் சூட்ட வேண்டும் என சர்ச்சைகள் எழுந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த வருடம் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் என கூகுள் மேப்பில் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இது குறித்து செய்தி வெளியானது பின்னர் பெயர் நீக்கப்பட்டு மீண்டும் மதுரை விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டது. இந்த நிலையில், கூகுள் மேப்பில் மதுரை விமான நிலையத்தில் பெயர் பதிலாக முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என ஜாதி பெயர் குறிப்பிட்டுள்ளது
.அதேபோல் ஆங்கிலத்தில் madurai airport எனவும் பெயர் பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவதில் பல்வேறு சமூகத்தினர் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என ஜாதி பெயர் குறிப்பிட்டு கூகுள் மேப்பில் பதிவாகியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu