இயற்கையை வலியுறுத்தி தொடர் சிலம்பாட்டம்: மதுரை மாணவர்கள் உலக சாதனை
சிலம்பம் போட்டியில் உலக சாதனை படைத்த மதுரை மாணவர்கள்
சிலம்பம் என்பது ஒரு பழங்கால ஆயுத அடிப்படையிலான தற்காப்புக் கலையாகும் , இது இப்போது இந்தியாவின் தமிழ்நாடு பகுதியான தமிழ்நாட்டில் தோன்றியது . இது உலகின் பழமையான தற்காப்புக் கலைகளில் ஒன்றாகும்.
வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.
சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை திருவள்ளூர் , திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது
தென்காசி மாவட்ட சிலம்பாட்டக் கழகம் மற்றும் பொதிகை சிலம்பக் கலைக்குழு இணைந்து இலஞ்சியில் இயற்கையைக் காக்க வலியுறுத்தி உலக சாதனை முயற்சியாக இந்நிகழ்வை, நடத்தின. மதுரை மாவட்டத்தில் இருந்து, எம்.கே.ஏ. சிலம்பாட்ட பயிற்சி மையத்திலிருந்து பயிற்சியாளர் குமார் தலைமையில் மாணவர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீமதி, அபிஷேக், சிவித்ரா, யுகேஷ் ராம், சூரிய பிரவேல், நரேஷ், பிரணவ், பிருத்வி, ஜெகதீஷ் ஆகிய 9 மாணவர்கள் தொடர்ச்சியாக 60 நிமிடங்கள் கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு, சிலம்பம் சுற்றினர்.
இது, 'டிவைன் உலக சாதனை' புத்தகத்தில் தனித்திறமை சாதனையாகப் பதிவானது. தவிர, தமிழகம் முழுவதும் இருந்து600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற தொடர் சிலம்பம் சுற்றும் உலக சாதனையும் நிகழ்த்தப்பட்டது.
தென்காசி மாவட்ட சிலம்பாட்ட கழகத்தலைவர் மோகன கிருஷ்ணன், தமிழ்நாடு சிலம்பாட்ட கழக தலைமை போட்டி இயக்குனர் சுந்தர், சிலம்பாட்ட கழகச் செயலாளர் சேர்மப்பாண்டி உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu