மதுரை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில், வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிப்பு

மதுரை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில், வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிப்பு
X

திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் உள்ள கொடிக் கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது

தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 வது ஆண்டு விழாவை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் நூத்தி முப்பத்தி ஏழு வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக, மதுரை திருப்பரங்குன்றம் கீழ ரத வீதி சந்திப்பில் உள்ள சுதந்திர போராட்ட வீரரும் தியாகி வ. உ. சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து, திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் தெருவில் உள்ள கொடிக் கம்பத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில், மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மாபட்டி பாண்டியன், மாநில செயலாளர் மகேந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சத்தியன் சிவன் முன்னிலையில், மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

Tags

Next Story
டெய்லியும் நீங்க வெவ்வேற டைம்ல தூங்குனா என்ன ஆகும் தெரியுமா..?