மதுரை அருகே பள்ளி மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய காங்கிரஸ் எம்.பி.
மதுரை அருகே பள்ளி மாணவர்களின் விமான நிலையத்தை நேரில் பார்க்கும் ஆசையை நிறைவேற்றிய காங்கிரஸ் எம்பி. மாணிக்கம் தாகூர்
மதுரை விமான நிலையத்தில் நேரடியாக விமானத்தை பார்வையிட திருப்பரங்குன்றம் ஊராட்சி பள்ளி மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்:
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், சம்பக் குளம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக காலை உணவு திட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களின் குறிக்கோளை கேட்டு அறிந்தார். அதில், ஒவ்வொரு மாணவர்களும் டாக்டர் இன்ஜினியர் போலீசார் என, கூறினர். ஒரு சில மாணவர்கள் பைலட்டாக வேண்டும் எனவும் கூறினர். அவர்களிடம் எத்தனை பேர் விமானத்தை பார்த்து உள்ளீர்களா என்று கேட்டதற்கு. வெகு உயரத்தில் வானத்தில் பறக்கும் போது தான் பார்த்துள்ளோம் எனக் கூறினர்.
இதையடுத்து, பள்ளியில் உள்ள 175 மாணவர்களுக்கும் தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்து, மதுரை விமான நிலையத்திற்கு எம்பி மாணிக்கம்தாகூர் அழைத்துச் சென்றார். அங்குள்ள விமான நிலைய முனைய அலுவலக மாடிக்கு சென்ற மாணவர்கள் அங்கிருந்து விமானம் ஏறுவதையும் இறங்குவதையும் பார்த்து ரசித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்கள் பள்ளிக்கு வருகை தந்த எம்பி மாணிக் தாகூரிடம் நாங்கள் விமான பைலட் ஆக வேண்டும் என கூறியதைக் கேட்ட அவர் எங்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில் விமான நிலையத்தை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தார். அதற்கு, அவருக்கு முதலில் நன்றி தெரிவிக்கிறோம். விமானத்தை நாங்கள் அருகில் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.. எங்களது பைலட் ஆகும் லட்சியம் நிறைவேற முழு முயற்சி எடுப்போம் எனவும் கூறினர்.
பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்களையும் தனது சொந்த செலவில் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று விமானத்தை பார்க்க வைத்து மகிழ்வித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்பியை பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் அப்பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu