பெரும்பிடுகு முத்தரையர்சிலைக்கு காங்கிரஸ் தலைவர் மரியாதை

பெரும்பிடுகை முத்திரையர் சிலைக்கு மரியாதை செய்த காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, சரந்தாங்கி கிராமத்தில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் :
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வருகை தந்து பல்வேறு பகுதிகளில் கொடி ஏற்றினார். சரந்தாங்கி கிராமத்தில் அமைந்துள்ள பேரரசு பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், காங்கிரஸ் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார் .
தொடர்ந்து, முடுவார்பட்டி, விஜயமங்கலம், அலங்காநல்லூர் பேருந்து நிலையம், கல்லணை நேதாஜி நகர், மேலச்சின்னம் பட்டி, செம்புக்குடிபட்டி, தனிச்சியம், உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் கொடி ஏற்றி வைத்தார்
பின்னர் அவர் பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாட்டிற்கு செய்த திட்டங்களை இன்றும் பேசப்படுகின்றன. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாஜக அரசு மக்களுக்கு எந்த ஒரு திட்டங்களையும் செய்து தரவில்லை. பெட்ரோல் மற்றும் டீசலை சிலிண்டர் அதிக விலையை விற்பனை செய்து வருவதும் ஆட்சியாளர்களின் எடுத்துக்காட்டாக உள்ளது.
இந்தியாவில் அதிக பணக்காரர்கள், பிரதமர் மோடி ஆசீர்வாதத்தால் வங்கியில் கோடிக்கணக்கில் கடன் பெற்ற அதானி, மற்றும் அம்பானி ஆகியோர் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக ஒரு மாயை உருவாக்கி, சட்டமன்றத்தில் உள்ளே நுழைந்தவுடன் வெளியே செல்வது என் சட்டமன்ற மாண்பை கெடுக்கும் விதமாக அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளது.
அதிமுக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலுவிழந்து வருகிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுகவை வீழ்த்தி நமது கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதியிலும் மகத்தான வெற்றி பெற நமது காங்கிரஸ் கட்சி பேரியக்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து அயராது பாடுபட வேண்டும் என்று கூறினார்.
இதில், மாவட்ட தலைவர்கள் வடக்கு மாவட்டத் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன், மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், வட்டாரத் தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி, நிர்வாகிகள் ஜெயமணி, ராமமூர்த்தி, சரந்தாங்கிமுத்து, சசிகுமார், வைரமணி, சந்திரசேகர், திரவியம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக , கிராமப் பகுதிகளுக்கு வருகை தந்த மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு, மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன், ஆகியோருக்கு வட்டார நிர்வாகிகள் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu