மதுரை அருகே பாதுகாப்பற்ற கட்டிடத்தில் தனியார் பள்ளி இயங்குவதாக புகார்

மதுரை அருகே  பாதுகாப்பற்ற கட்டிடத்தில் தனியார் பள்ளி இயங்குவதாக புகார்
X

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் உரிய வசதியின்றி இயங்கும் தனியார் பள்ளி.

மதுரை அருகே பாதுகாப்பற்ற கட்டிடத்தில் தனியார் பள்ளி இயங்குவதாக பொது மக்கள் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

மதுரை அருகே போதிய இடவசதி இல்லாமல், இயக்கும் மழலையர் பள்ளி விபத்து பாதுகாப்பு இல்லாமல் போதிய இட வசதி ஏதுமின்றி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகே பாடசாலை செல்லும் வழியில், தனியார் மழலை பள்ளி செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மேலும், இது பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருவதாகவும், ஏதேனும் தீ விபத்துக்கள் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டாலோ குழந்தைகள் வெளியே செல்வதற்கான போதிய வழிகள் இல்லையாம்.

மேலும் ,இந்த பள்ளி அடிக்கடி இடம் மாற்றி வருவதாகவும், ஒரே இடத்தில் செயல்படுவது இல்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இப்பொழுது செயல்பட்டு வரும் இந்த பள்ளி இதற்கு முன்பு உணவு விடுதியாக இருந்ததாகவும், குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியாளர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழந்தைகளின் உயிர்காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரையும் எதிர்பார்ப்பாக உள்ளது..

மேலும் மதுரை மாவட்டத்தில் உரிய பாதுகாப்பு இன்றி இயங்கும் தனியார் பள்ளிகளை மதுரை மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் போதிய வசதி இன்றி செயல்படும் தனியார் பள்ளிகளை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதுகாப்பு இல்லாத கட்டிடங்களில் பள்ளிகள் இயங்கினால் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமான ஒன்றாகும்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!