வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க விவசாயிகளுக்கு  ஆட்சியர் வேண்டுகோள்
X

மதுரை ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர்.

விவசாயிகள் தங்கள் வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க மதுரை ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வரவு வைக்கப்பட்டு வருகிறது.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் இதுவரை 10 முறை விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு ஊக்கத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

எனவே, மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் விவசாயிகள் தங்களின் ஆதார் விவரங்களை இணையதளத்தில் புதுப்பிக்கவும் மற்றும் தங்களின் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை 31.03.2022-க்குள் தவறாது இணைத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
குமாரபாளையத்தில் அத்துமீறிய சாயப்பட்டறைகள் மீது அதிரடி நடவடிக்கை - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு