மதுரை நகரில் மழைக்கு சேதமடைந்த சாலைகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!

மதுரை நகரில் மழைக்கு சேதமடைந்த சாலைகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!
X

சேதமடைந்த சாலைகளை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா.

மதுரையில் சமீபத்தில் பெய்த மழைக்கு சேதமடைந்த சாலைகளை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம் மழையினால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள்: மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார்,ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை.

மதுரை மாநகராட்சி பகுதிகளில், மழையினால் சேதமடைந்த முக்கிய சாலைகள் சீரமைக்கும் பணிகளை, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ. சங்கீதா, ஆணையாளர் ச.தினேஷ்குமார், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மாநகராட்சி பகுதிகளில், கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையினால் மாநகரப் பகுதியில் உள்ள முக்கியமான சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்தது. மதுரை மாநகராட்சி முக்கியமான சாலைகளை சீரமைக்க பணிகளை பொறியாளர் உடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முக்கியமான சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன்படி , மதுரை மாநகராட்சி மேல மாரட் வீதி, மேல வெளி வீதி, டி. பி. கே .ரோடு, பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் அருகில் மேலவாசல் ,திடீர் நகர் பகுதி, மேலவெளி வீதி குட்செட் தெரு அருகில், பாலம் ஸ்டேஷன் ரோடு, சிம்மக்கல், மீனாட்சி கல்லூரி பாலம், கோரிப்பாளையம் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சாலை பகுதிகளில் சாலைகள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சி தலைவர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் , நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள இதர சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில், போது தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், செயற் பொறியாளர்கள் பாக்கியலட்சுமி, சேகர்,உதவி செயற்பொறியாளர்கள் மயிலேரிநாதன், காமராஜ் உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers