கோவை டிஐஜி தற்கொலை வழக்கில் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏ
அதிமுக எம்.எல்.ஏ ராசன் செல்லப்பா
டிஐஜி தற்கொலை விவகாரம் குறித்து உண்மை நிலவரம் காவல் துறை ஆணையம் வெளியிட வேண்டும் என மதுரை விமான நிலையத்தில் அதிமுக எம்.எல்.ஏ வி.வி. ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
சென்னையில் இருந்து விமான மூலம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளருக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்த கேள்விக்கு, கொலை, கொள்ளை, கலவரம் உள்ளிட்ட குற்றங்கள் நடக்கும்போது, காவல்துறையின் உயர் அதிகாரிகள் முதல் களத்தில் நிற்கும் போலீஸார் வரை பல்வேறு மன உளைச்சலுக்கு ஆட்படுகின்றனர். இந்த இரண்டு ஆண்டு காலம், ஸ்டாலின் தலைமையில் இருக்கும் அரசு நிர்வாகம் சரியில்லாத காரணத்தால், எல்லா வகையிலும் தமிழகம் சீர்கெட்டு போய் கிடக்கிறது. தேனி மாவட்டத்தை சேர்ந்த அவர் மதுரையில் திருமணம் முடித்தவர். உயர் காவல் அதிகாரி தன்னைத் தானே சுட்டு, உயிரை மாய்த்துக் கொள்வதற்கு பணிச் சுமைதான் காரணமா அல்லது வேறு காரணமா என்று இன்னும் தெரியவில்லை.
இச்சம்பவத்துக்கு கண்டனத்தை தெரிவிப்பதை விட முதலில் வருத்தத்தை பதிவு செய்கிறோம். ஆனால் இது போன்ற நிகழ்வுகள் காவல்துறையில் வரலாற்றில் நிகழ் பெற்றது இல்லை. காவல்துறை ஆணையம் இது குறித்து விசாரணை செய்து உடனடியாக சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நடைபெற்றிருக்கிற நிகழ்வு யாரும் எதிர்பார்த்திராத, காவல்துறையில் இதுவரை நடந்திராத ஒன்ரு. ஒரு உயர் அதிகாரி தன்னை பலி கொடுத்திருக்கிறார். மொத்தத்தில் இந்த அரசு மிகவும் பலவீனப்பட்டு போயிருக்கிறது, மக்களை மட்டும் காப்பாற்ற முடியாத அரசாக இல்லாமல் காவலர்களையும் காப்பாற்ற முடியாத அரசாக உள்ளது.
ஓ.பி.ரவிந்திர நாத் எம்பி பதவியை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது குறித்த கேள்விக்கு, அதில் நீதித்துறை தெளிவான கருத்துகளை சொல்லி இருக்கிறார்கள். அவர் தன் விண்ணப்பத்திலேயே தவறு செய்திருக்கிறார் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். நீதித்துறையில் அவருக்கு காலக்கெடு கொடுத்திருக்கிறார்கள். உண்மையான காரணம் தெரிந்த பிறகு அதைப் பற்றி பேசுவோம்.
மதுரை விமான நிலையம் முத்துராமலிங்க தேவர் பெயர் வைப்பது குறித்த கேள்விக்கு, மதுரை விமான நிலையத்தை பொருத்த வரை பெயர் வைப்பது சர்ச்சைக்குரிய விஷயமாக நீண்ட நெடிய நாளாக இருக்கிறது. குறிப்பிட்ட சிலர் வேறு பெயர்களை வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆகவே, இது குறித்த கருத்துகளுக்கு தெளிவான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை. இந்த அரசாங்கமும் மத்திய அரசாங்கமும் உரிய முடிவுகளை விரைவில் எடுக்கும் என்று நம்புகிறேன்.
ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் அதிமுகவின் பொன்விழா மாநாடு குறித்த கேள்விக்கு. எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. அதற்கான அரங்கம் அமைக்கும் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய துணைக்கண்ட அளவில் சிறப்பான மாநாடாக நடத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளோம்.. அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாம் நாள் காலை 7 மணி அளவில் மாநாட்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் அரங்கம் அமைப்பதற்கான கால் கோல் விழா நடைபெறுகிறது. நிர்வாகிகள் கூட்டமும் இந்த மாநாடு எப்படி சிறப்பாக நடத்துவது குறித்தும் நடைபெற இருக்கிறது என்றார் ராஜன் செல்லப்பா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu