சோழவந்தான் கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்

சோழவந்தான் கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம்
X

சோழவந்தான் வெள்ளாவி கருப்பணசாமி ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற யாகசாலை பூஜை

மங்கள இசையுடன் யாக பூஜை தொடங்கப்பட்டு, மகா பூர்ணாஹூதி நடந்து மேளதாளத்துடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது

மதுரை அருகே சோழவந்தான் வைகை ஆற்று கரையில் வீற்றிருக்கும் வெள்ளாவி கருப்பணசாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு, இரண்டு நாட்கள், திருவேடகம் கணேச பட்டர் யாகபூஜை நடத்தினார். மங்கள இசையுடன் யாக பூஜை தொடங்கப்பட்டு, மகா பூர்ணாஹூதி நடந்து மேளதாளத்துடன் விழா கமிட்டியினர் பூசாரி, எஸ். பி. செல்வம் நாகமணி, பாண்டி, நாகராஜ், ராமன், பொன்னுச்சாமி, செந்தில் ,மூக்காண்டி, கௌதம் மணிகண்டன் ஆகியோர் புனித நீர்க் குடங்களை எடுத்து கோயிலை வலம் வந்தனர். பின்னர் , மகா அபிஷேகம் நடைபெற்றது. பூசாரி எஸ் பி செல்வம் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, சலவைத் தொழிலாளர் சங்கம், இளையநிலா நற்பணி மன்றம் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!