காவிரி பிரச்னையை தமிழக முதல்வர் பெரிதாக்க விரும்பவில்லை: வைகோ.

காவிரி பிரச்னையை தமிழக முதல்வர் பெரிதாக்க விரும்பவில்லை: வைகோ.
X

மதிமுக பொதுச் செயலர் வைகோ.

காவிரி பிரச்னையில் கொடுக்க வேண்டிய அழுத்தத்தை ஒழுங்காக சுப்ரீம் கோர்ட் கொடுக்கிறது.

காவிரி பிரச்சனையின் மூலம் கலவர சூழ்நிலை உருவாக்கி கர்நாடகத்தில் உள்ள தமிழர்களின் நிலையை கேள்விக்குறியாக முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லை என்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் பேசியதாவது: கர்நாடகத்தில், தமிழக முதலமைச்சர் திருவுருவப்படத்தை அவமரியாதை செய்து மற்றும் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தமிழ் நடிகர் சித்தார்த் அவமதித்து இருக்கிறது தமிழக அரசு இன்னும் எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்காமல் இருப்பது குறித்த கேள்விக்கு,

கொடுக்க வேண்டிய அழுத்தத்தை ஒழுங்காக, சுப்ரீம் கோர்ட் கொடுக்கிறது. சுப்ரீம் கோர்ட் மிகவும் நியாயத் தன்மையுடன் நடந்து கொள்கிறது. அங்கேயும் நம் தமிழர்கள் இருக்கிறார்கள், கலவரத்துக்கு வழிவகை வைக்க வேண்டும் என்று கன்னடத்தவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக தமிழக முதலமைச்சர் மிகவும் கவனமாக கொண்டு செல்கிறார்.

மதிமுகவில் தொகுதி பங்கீடு நடைபெற்று வருவதாக தகவல் வந்திருக்கிறது குறித்த கேள்விக்குஅந்த மாதிரி எல்லாம் எதுவும் நடக்கவில்லை. அதை பற்றி இன்னும் பேசவில்லை. பத்திரிகைகள் கற்பனையில் எழுதுகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது என்று பிரதமர் மோடி பேசியது குறித்த கேள்விக்கு, நாடாளுமன்றத்தில் பெண்களுக் கான இட ஒதுக்கீடு எந்த ஒரு வரவேற்பையும் பெறவில்லை, மோடி அவராகவே அது வரவேற்பு பெற்றுள்ளது என்று கூறிக் கொண்டிருக்கிறார் என்றார் வைகோ.

Tags

Next Story