தமிழ்நாட்டுக்கு தலைநகர் சென்னை: அரசியலுக்கு தலைநகர் மதுரை: செல்லூர் ராஜூ

மதுரை திருநகர் பகுதியில், அதிமுக கழக தொழில் நுட்ப பிரிவு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாட்டிற்கு தலைநகர் சென்னை என்றால் அரசியலுக்கு தலைநகர் மதுரைதான் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.
மதுரை திருநகர் பகுதியில், அதிமுக கழக தொழில் நுட்ப பிரிவு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மதுரை மண்டல தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு புத்தக தொகுப்பு மற்றும் கையேடுகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் பேசிய, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில்:அண்ணன் ராஜன்செல்லப்பா என்றும் பதினாறு அவரைப் போலவே அவருடைய மகனும். அப்பா எட்டடி பாய்ந்தால் மகன் பதினாறடி பாய்கிறார். தமிழ்நாட்டிற்கு தலைநகர் சென்னை என்றால் அரசியலுக்கு தலைநகர் மதுரை என்றார்.
நிகழ்வில், முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறுகையில்:பத்தாண்டு காலம் ஆட்சி செய்தும் தேர்தல் நேரத்தில் எடப்பாடி அரசு வாக்கு கேட்டு செல்லும் போது எந்த எதிர்ப்பும் மக்களிடம் இல்லை. ஆனால், திமுக இந்த பத்து மாத காலத்தில் அவ்வளவு கெட்ட பெயர் வாங்கி உள்ளனர். எல்லா தரப்பு மக்களும் கஷ்டப்படுகிறார்கள். ஓட்டு, முழுக்க இரட்டை இலைக்கு தான் போட்டோம். எப்படி உதயசூரியனுக்கு விழுந்தது எனத்தெரியவில்லை. மேஜிக் செய்துவிட்டதாக கூறுகின்றனர்.
வாக்கு முழுக்க இரட்டை இலைக்கு தான் போட்டோம் என சத்தியம் செய்து சொல்லுகின்றனர் மக்கள்.எதுவுமே செய்யாத திமுகவுக்கு மக்கள் எதற்கு வாக்களிக்க போகிறார்கள். மக்களின் வாக்குரிமையை பறித்து வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்துள்ளனர் என, அடித்துச்சொல்லுவேன். அப்படி செய்யவில்லையென்றால் வாக்கு இயந்திரங்களை, சிபிஐயிடம் கொடுத்து விசாரணை செய்ய சொல்லுங்கள்.
மக்கள், அதிமுகவுக்கு தான் வாக்களித்தனர். உள்ளாட்சி தேர்தல் தோல்வி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். திமுக பொய் செய்து தான் வெற்றி பெற்றுள்ளனர். தைரியம் இருந்தால் மறுதேர்தல் வையுங்கள் இல்லை வாக்கு இயந்திரங்களை நடுநிலை நிர்வாகத்திடம் ஒப்படையுங்கள் என்றார் எஸ்.பி.வேலுமணி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu