திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஸ்கேனர் கருவி; பக்தர் உடைமைகள் சோதனை

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டு, பக்தர் உடைமைகள் சோதனை.
மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக் கோவிலில், பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க 14 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் குருசாமி, புதிய ஸ்கேனர் கருவியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் உளவுத்துறை பாதுகாப்பை அதிகரிக்க கோரி, சுற்றரிக்கை அனுப்பியிருந்த நிலையில், ஏற்கனவே கோயிலுக்கு வரும் பக்கதர்களை பரிசோதிக்க வாக்கிங் ஸ்கேனர் உள்ளது.
இந்நிலையில், மேலும், பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க கூடுதலாக கோயில் சார்பாக சுமார் 14 லட்ச மதிப்பீட்டில் புதிய லக்கேஜ் ஸ்கேனர் வாங்கப்பட்டுள்ளது. அதனை கோவிலில் ஆஸ்தான மண்டபத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் குருசாமி திறந்து வைத்தார். கோயிலின் கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி , சுமதி, சத்தியசீலன் ஆகியோர் உடன் இருந்தனர் . பக்தர்கள் லக்கேஜ் ஸ்கேனருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu