'சந்திராயன்-3 ' ஆகஸ்டில் விண்ணில் ஏவப்படும்: துணை இயக்குநர்

சந்திராயன்-3  ஆகஸ்டில் விண்ணில் ஏவப்படும்: துணை இயக்குநர்
X

மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் மாணவர்களுக்கான பிரத்தியேக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்றேகற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் வெங்கடராமன்.

‘சந்திராயன்-3 ’ ஆகஸ்டில் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய துணை இயக்குனர் வெங்கடராமன் தெரிவித்துள்ளார்.

மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளியில் மாணவர்களுக்கான பிரத்தியேக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் துணை இயக்குனர் மற்றும் குயின் மீரா சர்வதேச பள்ளியில் ஆலோசனைக்குழு உறுப்பினருமான வெங்கட்ராமன் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாடினார்.

பின்பு.இந்திய விண்வெளி மையத்தின் பாரம்பரியம் குறித்தும் அதன் பெருமைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு எளிய முறையில் விளக்கம் அளித்தார் இந்திய விண்வெளி மையத்தின் ஆராய்ச்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் இதில் பள்ளியின் தலைவர் சந்திரன் பள்ளியின் நிர்வாக இயக்குனர் அபிநாத் சந்திரன் கல்வி இயக்குனர் சுஜாதா குப்தன் நிர்வாக இணை இயக்குனர் செல்வி ஷீபா மற்ற மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!