திருப்பரங்குன்றம் கோவில் தேரோட்ட விழாவில் செயின் பறிப்பு

திருப்பரங்குன்றம் கோவில் தேரோட்ட விழாவில் செயின் பறிப்பு
X
மதுரை திருப்பரங்குன்றம் கோவில் தேரோட்ட கூட்ட நெரிசலில், 12 பவுன் தாலி செயின் பறிப்பு குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இதில், கூட்டத்தில் பெண் பக்தர்களிடம் அடுத்தடுத்து கைவரிசையை காட்டி, 12 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

அவனியாபுரம், எம்.கே. நகரை சேர்ந்தவர் நீலவேணி, வயது 55, கிரிவலப்பாதையில் சென்றபோது, அவர் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளனர். இதேபோல், திருநகர் சீனிவாச நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கௌரி வயது 68 இடம், 9 1/4 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இருவரும் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story