எதிர்கட்சிகளை மத்திய அரசு நசுக்க பார்க்கிறது: வைகோ எம்.பி

எதிர்கட்சிகளை மத்திய அரசு நசுக்க பார்க்கிறது: வைகோ எம்.பி
X

வைகோ. எம்.பி.(பைல் படம்)

ராகுல் காந்தியை அரசியலில் இருந்து எப்படியா வது ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்ற நினைக்கின்றனர்

ஓ.பி.ரவீந்திரநாத் விவகாரத்தில் தேர்தல் முறைகேடுகள் இருந்தால் வெற்றி செல்லாது என்பது சொல்வது வழக்கம். அதுபோல அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். குறித்து வைகோ பேட்டி:

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

அரசியல் பழிவாங்கும் போக்கு நரேந்திர மோடி அரசிலே அதிகரித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் அனைத்தையும் நசுக்க வேண்டும், குரல்வளையை நெறிக்க வேண்டும் எண்ணத்தோடு செயல்படுகிறார்கள். அவர் , நீரவ்மோடி போன்றவர்கள் பணத்தை சுருட்டி கொண்டு வெளிநாட்டில் சௌகரியமாக இருந்து கொண்டே அவர்களைத்தான் குறிப்பிட்டார்கள் தவிர, மோடி சமூகத்தை குறிப்பிடவில்லை.

இதை விட கொடிய குற்றங்களை செய்தவர்கள் எல்லாம் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆனால், ராகுல் காந்தியை அரசியலில் இருந்து எப்படியாவது ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்ற இந்த தீர்ப்பு பயன்படும். நான் நீதிபதியை குறை சொல்லவில்லை. ஆனால், குஜராத் மாநிலத்தில் நடைபெறுவதெல்லாம் அநியாயமான ஜனநாயக படுகொலைகள்தான். பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அது நரேந்திர மோடியின் ஆட்சியில்தான்.அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு செல்கின்றார்கள். ராகுல் காந்திக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்

ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு: அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. அது வேற இது வேற. தேர்தல் முறைகேடுகள் இருந்தால் வெற்றி செல்லாது என்பது சொல்வது வழக்கம். அதுபோல அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக அரசு தலையிடக்கூடாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு:அண்ணாமலை தினம் ஒன்று சொல்கிறார். எல்லா பிரச்னைகளிலும் தலையிட்டு பேசுகிறார். அவை ஒவ்வொன்றிற்கும் நான் பதில் சொல்ல முடியாது என்றார் வைகோ.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!