தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்

சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பஸ்களில் 2900 சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெறுகிறது என்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னையில் போக்குவரத்துக்கழக பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பெறுத்தும் பணி நடைபெறுகிறது எனபோக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசியதாவது: தனியார் பேருந்துகளில், அதிக கட்டணம் வசூல் குறித்து முறையான புகார்கள் வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் உத்தரவுப்படி, கட்டணம் நிர்ணயம் செய்துள்ளோம். அதிக கட்டணம வசூலிக்கும் பஸ்ஸின் பெயரை குறிப்பிட்டு சொன்னால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பேருந்துகளில் சிசிடிவி பொருத்தம் பணி தற்போது, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் நடைபெறுகிறது. 2900 கேமரா பொருத்தும் பணி தற்போது நடைபெறுகிறது. பேருந்துகளில், தவறுகள் நடக்கா வண்ணம் முதலமைச்சர் உத்தரவு படி கண்காணிக்கப்படும். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். தீபாவளி பண்டிகை காலங்களில் மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும்.என போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பன் கூறினார்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!