மதுரை மின் வாரிய அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற போர்மேன் கைது: விஜிலென்ஸ் அதிரடி

லஞ்சம் வாங்கியதாக பிடிபட்ட மின்வாரிய ஊழியர்.
Bribed Foreman Arrested
தமிழகத்தில் பல அரசு அலுவலகங்களில் வேலைகளை முடித்து தர லஞ்சம் பெற்று அதிகாரிகள் கைதாவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தற்போது பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் ஒரு சிலர் அவர்கள் கேட்கும் லஞ்சத்தை தராமல் லஞ்ச ‘ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் நேரடியாக புகார் அளித்து விடுகின்றனர்.
மதுரை ஞானஒளிவுபுரம் பகுதியை சேர்ந்த பிரிட்டோ சகாயராஜ் என்பவர் புதிய வீடு கட்டுவதற்காக தற்காலிக மின் இணைப்பு பெறுவதற்கு மதுரை விளாங்குடி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, மின்வாரிய உதவிப்பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் போர்மென் ஜான் கென்னடி என்பவர், 20ஆயிரம் லஞ்சம் கேட்ட பின்னர் 17 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால் இணைப்பு பெற்று தருகிறேன் என, கூறியுள்ளார். இதனையடுத்து, பிரிட்டோ சகாயராஜ் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யசீலனுக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனைப்படி அவர்கள் அளித்த ரசாயனம் தடவிய லஞ்ச பணம் 17ஆயிரம் ரூபாயை பிரிட்டோ சகாயாராஜ் இன்று மின்வாரிய உதவிப்பொறியாளர் அலுவலகத்திற்கு கொண்டுசென்றார்.
அதனை ஜான் கென்னடியிடம், கொடுத்தபோது லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக ஜான் கென்னடியை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். மதுரையில் மின் இணைப்பிற்கு லஞ்சம் கேட்ட போர்மெனை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu