மதுரை அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

மதுரை அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற சிறுவன்  நீரில் மூழ்கி பலி
X

நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் ஜீவன்.

மாடக்குளம் கண்மாயில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பைபாஸ் சாலை சொக்கலிங்க நகரைச் சேர்ந்த சிறுவன் ஜீவன் வயது 14. இவர் மாடக்குளம் கண்மாயில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கண்மாயில் உள்ள சேற்றில் சிக்கிய சிறுவன் நீரில் மூழ்கினான். உடனடியாக அக்கம் பக்கத்தினர், மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கும், 108 அவசரகால ஊர்திக்கும் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் இறந்த நிலையிலேயே சிறுவனை மீட்க முடிந்தது. இச்சம்பவம் குறித்து மதுரை எஸ். எஸ். காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!