மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு மோப்ப நாய்க்கு மரியாதை

மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு மோப்ப நாய்க்கு மரியாதை
X

மதுரை விமான நிலையத்தில் மோப்ப நாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர்.

மதுரை விமான நிலையில் உயிரிழந்த ‘ரெய்மோ என்ற அர்ஜுன்’ மோப்ப நாயை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நல்லடக்கம் செய்தனர்.

மதுரை விமான நிலையத்தில், மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் மோப்ப நாயாக 8 ஆண்டுகளாக பணியாற்றிய 'ரெய்மோ என்ற அர்ஜுன்' நேற்று முன்தினம் மாலை உடல்நலம் குறைவால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த 'ரெய்மோ என்ற அர்ஜுன்' மோப்ப நாய்க்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை மரியாதையுடன் மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் விமான நிலைய அதிகாரிகள், 200க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஒன்றிணைந்து சிறப்பு அஞ்சலி செலுத்தினர்.

இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், மதுரை விமான நிலைய இயக்குனர், மத்திய தொழில் பாதுகாப்பு படை துணைக் கமாண்டர் உமாமகேஸ்வரன், உதவிகமாண்டர் சனீஷ் ஆகியோர் மலர் வளையம் வைத்து வீர அஞ்சலி செலுத்தினர்.

8 ஆண்டுகளாக மதுரை விமான நிலையத்தில் தடுப்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது