மதுரை அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் ரத்த தான முகாம்

மதுரை அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் ரத்த தான முகாம்
X

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

மதுரை அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் (மதுரை மண்டலம்) அரசு ராசாசி மருத்துவமனை மற்றும் திடீர் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒருங்கிணைந்து நடத்திய ரத்த தான முகாமை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ஆ.ஆறுமுகம், தொடங்கி வைத்தார்.

மதுரை திடீர் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் இன்றைய தினம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்டது. ரத்ததான முகாமில், அரசு இராஜாஜி மருத்துவமனை மற்றும் திடீர் நகர் நகர்புற சுகாதார செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு ரத்த சேமிப்பு செய்தனர்.

இம்முகாமில் 50-ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். பொது மேலாளர் ராகவன், முதல்நிலை துணை மேலாளர் இளங்கோவன், உதவி மேலாளர் கலாதேவி மற்றும் மதுரை திடீர் நகர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கிறிஸ்டோபர், ஆற்றுநர் இந்திரா தேவி ஆய்வக நுட்பனர் புவனேஸ்வரி உட்பட அரசு அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!