வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அமைச்சர் உதயநிதி, மூத்த அமைச்சர்களை அழைத்து செல்லாது ஏன்?:அண்ணாமலை

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு  அமைச்சர் உதயநிதி, மூத்த அமைச்சர்களை அழைத்து செல்லாது ஏன்?:அண்ணாமலை
X

மதுரை விமானநிலையத்தில்  பாஜ மாநில தலைவர் அண்ணாமலை  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

Bjp State President Interview மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மாரி செல்வராஜுடன் சென்ற அமைச்சர் உதயநிதி .மூத்த அமைச்சர்கள் துரைமுருகன் உள்பட வேறு யாரும் பார்வையிடவில்லை. மதுரை விமான நிலையத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.

Bjp State President Interview

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளதால் பாஜக கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் | களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்கள். மழை வெள்ள பாதிப்பு இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் இந்திய கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லி பயணம் செய்து உள்ளார். டெல்லிக்கு தமிழக முதல்வர் மட்டும் செல்லாமல் அவரோடு மூத்த கட்சி நிர்வாகிகள் அனைத்தையும் அழைத்து சென்றுள்ளார். மழை வெள்ளத்தால் தென்மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் முதலமைச்சர் எதையும் கண்டு கொள்ளாமல், இந்தியா கூட்டணி பேச்சு வார்த்தைக்காக தனது கட்சி மூத்த நிர்வாகிகளுடன் டெல்லி பயணம் செய்த சம்பவம் தமிழ்நாடு மக்களிடையே குறிப்பாக தென் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது தொடர்ந்து, பிரதமரை சந்திக்க நேரம் கேட்பது போல் செய்தி வெளியிடுகிறார். இந்த 15 நாட்களில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மக்கள் திமுகவின் அரசின் மீது மிகப்பெரிய கோபத்தில் உள்ளனர்.

சென்னை மற்றும் தென் மாவட்ட மக்களின் கோபம் 2024 தேர்தலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும். பேரிடர் குறித்து நிலையான முடிவெடுக்க முடியாத நிலையில் தமிழக முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்.

தந்தை பெயரை வைத்த முதல்வரானதால், பேரிடர் போன்ற விஷயங்களில் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் நிலையற்ற தன்மையில் தமிழக முதல்வர் நிலைத்து வருகிறார். வெள்ளம் பாதித்த இடங்களுக்கு தமிழக முதல்வர் செல்லாமல் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வெள்ளம் குறித்து ஆய்வு செய்துள்ளனர். பேரிடர் போன்ற பெரிய அச்சுறுத்தும் நிலையில் தமிழக முதல்வர் தன் மகனை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய விட்டுவிட்டு தமிழக முதல்வர் இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக டெல்லி சென்று இருக்கிறார்.

பேரிடர் காலங்களில், நடவடிக்கை எனக்கு அனுபவம் இல்லாத தன் மகனை களத்தில் இறக்கி ஆய்வு மேற்கொண்டுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

நிதி அமைச்சரை பின்னுக்கு தள்ளிவிட்டு உதயநிதி ஸ்டாலின் தனது பட இயக்குனரான மாரி செல்வராஜுடன் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு மேற்கொண்டுள்ளார். உதயநிதி தன்னுடைய ஆய்வுக்கெல்லாம் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆக்ஷன் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் போல ,

மூத்த அனுபவ அமைச்சர்களான துரைமுருகன்,கே.கே.எஸ்.ராமச்சந்திரன் போன்றவர்கள் அனுப்பாமல் பேரிடர் பற்றி ஒரு அனுபவம் இல்லாத அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வெள்ளம் பாதித்த இடங்களை சென்று ஆய்வு செய்ய சொன்னது தென் மாவட்ட மக்களிடம் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

நீர் வழிப் பாதைகள் உள்ள மணல்களை எல்லாம் மணல் கொள்ளை அடித்தது விளைவு தான் இந்த பேரிடருக்கு காரணம்.

தமிழக முதலமைச்சர் வெள்ள பாதிப்புகளுக்கு நிதி வேண்டும் என்று கேட்கும் போது மத்திய அரசு என்றும் நிதி குறித்து விவாதித்து விட்டு பேசும்போது ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவது குறித்த கேள்விக்கு

தமிழ்நாடு மக்கள் இந்த இரண்டு ஆண்டு கால திராவிட அரசியலை பார்த்து விட்டார்கள், 70 ஆண்டுகளாக திராவிட அரசியல், 15 நாட்களில் அஸ்திவாரம் உடைத்து எறியப்பட்டது.

வெல்லம் பாதித்த 24 மணி நேரத்தில் மத்திய அரசு ஐந்து ஹெலிகாப்டர், 30க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு அனுப்பி மக்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. வடக்கு தெற்கு என்று இவர்கள் தான் பேசி வருகிறார்கள், ஆனால் காப்பாற்ற வந்த வீரர்கள் வடக்கு தெற்கு என்ற எந்த பாகுபாடும் பார்க்கவில்லை அவர்கள் இந்திய ராணுவம் சீருடை அணிந்த ஒரே காரணத்திற்காக எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நிதி வேண்டும்போது மத்திய அரசு வேண்டாம் என்றால் ஒன்றிய அரசு என்று பேசி வருகிறார்கள் அமைச்சர் பொன்முடியை வழக்கில் சேர்க்க வேண்டும் என,நீதிமன்றம் சொல்லியுள்ளது.நெல்லையில் பெரியமழை பெய்து வருகிறது ஆனால் நெல்லையினுடைய மேயர் உதயநிதி ஸ்டாலின் உடன் கொண்டு இளைஞர் அணி மாநாடு குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார். இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தைக்கு என்ன அவசரம். அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்களை வரவேற்று பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய பாதிப்பு இருக்கும்போது, இது அவசியமில்லாத ஒன்று கூட்டணியில் மிகப்பெரிய கட்சி என்று கூறிக் கொள்ளும் முதல்வர் வெள்ள பாதிப்புக்காக கூட்டத்தை தள்ளி வைக்க மாட்டாரா எனகேள்வி எழுப்பினார். இந்த நாட்களில் 70 ஆண்டுகால திராவிட அரசியல் சரிந்து விட்டது. இந்த பாதிப்பையே கட்டுப்படுத்த முடியாதவர்கள் பெரிய பாதிப்பில்எவ்வாறு செயல்படுவார்கள்?.

*வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே தகவல்கள் தெரிவித்திருந்தால் வெள்ளத்தை கட்டுப்படுத்திருக்க முடியும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியது குறித்த கேள்விக்கு:

வானிலை ஆய்வு மையம் என்பது மழை எவ்வளவு பெய்யும் என்பது குறிப்பிட்டு கூடத்தான் முடியும் தவிர எந்த அளவு பெய்யும் எந்த அளவு புயல் இருக்கும் என்று சரியான கணக்கீடுடன் கூறிய முடியாது. இதற்காகத்தான் முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் சூப்பர் கம்ப்யூட்டர் உடன் பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வானிலை ஆய்வு மையம் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். பின்னர், தியாகராஜனை இலாக்கா மாற்றி அதனை தொடர்ந்து சூப்பர் கம்ப்யூட்டர்களுடன் கூடிய நவீன வானிலை ஆய்வு மையத்துக்கான அந்த 10 கோடி ரூபாய் என்ன ஆனது என்று தெரியவில்லை என தெரிவித்துவிட்டு, சாலை மார்க்கமாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை திருநெல்வேலி புறப்பட்டார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!