மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை யாத்திரை

மதுரை மேற்கு சட்டமன்ற  தொகுதியில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை யாத்திரை
X
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டார்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி ஜெய்ஹிந்த்புரம் பிரதான சாலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை என்மண், என்மக்கள் யாத்திரை மேற்கொண்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் என்மண் என்மக்கள் யாத்திரை சென்று வருகிறார். ஏற்கனவே, மதுரை மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, என் மக்கள் யாத்திரை செய்திருந்தார்.

இந்த நிலையில், விடுபட்ட மேற்கு சட்டமன்ற தொகுதியில் 103 வதுநாளாக என் மக்கள் யாத்திரை பயணத்திற்காக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெயவிலாஸ் பகுதிக்கு வந்திருந்தார்.

அங்கிருந்து, நடைபயணமாக சோலை அழகுபுரம்,எம். கே. புரம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை , என் மன் என் மக்கள் யாத்திரை பயணம் செய்தார். அப்போது வழிநெடுகளும் பாஜகவினர் மற்றும் பாஜகவின் கூட்டணி கட்சிகளான தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, இந்து மக்கள் கட்சி,இந்து எழுச்சி பேரவை, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து ஜீவாநகர் சந்திப்பு பகுதியில் ,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார்.மேலும், அண்ணாமலையின், என் மக்கள் யாத்திரையானது பிப்ரவரி 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நிறைவடைய உள்ளது. இந்த நிறைவு விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கான ஏற்பாடுகளை, பாஜகவினர் மும்பரமாக செய்து வருகின்றனர்.இன்று நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai marketing future