மதுரை அருகே மரக்கன்றுகள் வழங்கி வாக்குகள் சேகரித்த பாஜக வேட்பாளர்

மதுரை அருகே மரக்கன்றுகள் வழங்கி வாக்குகள் சேகரித்த பாஜக வேட்பாளர்
X

மதுரை திருப்பரங்குன்றம் 97வது வார்டு பாஜக வேட்பாளர் நித்யா வேல்முருகன் இன்று காலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருப்பரங்குன்றம் 97வது வார்டு பகுதியில் மரக்கன்றுகள் வழங்கி பாஜக வேட்பாளர் நித்யா வாக்குகள் சேகரித்தார்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது அனைத்து கட்சி வேட்பாளர்களும் விறுவிறுப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை திருப்பரங்குன்றம் 97வது வார்டு பாஜக வேட்பாளர் நித்யா வேல்முருகன் இன்று காலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது, திருப்பரங்குன்றம் ஜே ஜே நகர் பகுதியில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கி வாக்கு சேகரித்தார். மேலும், அந்த பகுதியில் மரக்கன்றுகள் நட்டு வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.

வாக்களர்களுக்கு மரகன்று வழங்கியது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

Tags

Next Story
ai in future education