மதுரை அருகே லாரி மீது பைக் மோதி இருவர் உயிரிழப்பு

மதுரை அருகே லாரி மீது பைக் மோதி இருவர் உயிரிழப்பு
X

பைல் படம்

மூன்று பேரும் வண்டியில் எதிர்ப்பாதையின் வழியே வேகமாக வந்தபோது, கண்டெய்னர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

மதுரை மண்டேலா நகர் அருகே நான்கு வழிச்சாலையில், கண்டெய்னர் லாரி மீது பைக் மோதி விபத்து பைக்கில் சென்ற வாலிபர்கள் இருவர் உயிரிழந்தனர் ஒருவர் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து, மதுரை தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சோளங்குரூணி கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகன் மகன் ரஞ்சித்( 16). இதே சோளங்குருணி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் வீர சந்தானம் (18). மற்றொரு வாலிபரின் பெயர் முகவரி தெரியவில்லை படுகாயம் அடைந்த வாலிபர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போக்குவரத்து புலனாய்வு போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மண்டேலா நகரில் இருந்து கண்டெய்னர் லாரி மாட்டுத்தாவணி நோக்கி செல்லும்போது, ஓட்டல் அருகே ஈச்சனோடை பிரிவிலிருந்து ரஞ்சித், வீரசந்தானம் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் வண்டியில் எதிர்ப்பாதையின் வழியே வேகமாக வந்தபோது, கண்டெய்னர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திலேயே ரஞ்சித், வீரசந்தானம் ஆகிய இருவரும் பலியாகினர். மற்றொரு வாலிபர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.விபத்தில் பலியான வாலிபர்களின் சடலங்களை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story