மதுரையில் ஹெலிகாப்டருக்கு நடத்தப்பட்ட ஆயுத பூஜை: வைரல் ஆன வீடியோ

மதுரையில் ஹெலிகாப்டருக்கு ஆயுத பூஜை கொண்டாடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆக பரவி வருகிறது.
ஏரோ டான் நிறுவனம் மற்றும் மை பிளை ஸ்கை நிறுவனம் மூலம் வரும் 24ம் தேதி வரை 4 நாட்களுக்கு மதுரையை ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். இச்சேவையானது விமான நிலையம் பின்புறம் நான்கு வழிச்சாலையில் சின்ன உடைப்பு அருகே உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் இருந்து இந்த வான்வழி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பிரத்யேக ஹெலிகாப்டர் ஆந்திர மாநிலம் கர்நூலிலிருந்து இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஒரு பகுதியாக, மதுரையில் இருந்து வான்வழி ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் செல்ல 21ம் தேதி முதல் வரும் 24ம் தேதி வரை காலை 9 மணியிலிருந்து 4 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ 6000 ரூபாய் வசுசூலிக்கப்படுகிறது.
ஒரு முறை ஆறு பேர் பயணம் செய்யும் சிறிய வகை ஹெலிகாப்டர் மூலம் மதுரை மற்றும் மதுரையில் சுற்றி சுற்றுப்புற பகுதிகளை 15 நிமிடங்கள் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு ஹெலிகாப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஹெலிகாப்டருக்கு பூஜை செய்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. ஹெலிகாப்டருக்கு ஆயுத பூஜை கொண்டாடிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆக பரவி வருகிறது.
கடைகள்,வர்த்தக நிறுவனங்கள், லேத் பட்டறைகள், சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் மட்டுமே போடப்பட்டு வந்த ஆயுத பூஜை ஹெலிகாப்டருக்கு போடப்பட்டு இருப்பது வித்தியாசனமான நிகழ்வாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu