மதுரை தாசில்தார் நகர் விநாயகர் கோவிலில் ஆயுத பூஜை விழா கொண்டாட்டம்

மதுரை தாசில்தார் நகர் விநாயகர் கோவிலில் ஆயுத பூஜை விழா கொண்டாட்டம்
X

வீணை வாசிக்கும் அலங்காரத்தில் சரஸ்வதி தேவி.

மதுரை தாசில்தார் நகர் விநாயகர் கோவிலில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, இக்கோயில் உள்ள விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இத்திருக்கோவிலில், நவராத்திரி முன்னிட்டு அம்பாள் தினசரி மாலைசிறப்பு அலங் காரங்களில் காட்சியளித்தார். பக்த கோடிகள், துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தனர் .

இதையடுத்து, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, பக்தர்களுக்கு பிர சாதங்கள் வழங்கப்பட்டன. இதே போல, பட்டிவீரன் பட்டி மாரியம்மன் ஆலயத்திலும், மதுரை அண்ணா நகர் யானைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்திலும், மதுரை தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயத்திலும், மதுரை கோமதிபுரம் ஞான சித்தி விநாயகர் ஆலயத்திலும், சோழவந்தான் சிவன் ஆலயத்திலும், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் ஆலயத்திலும், ஜனக நாராயண பெருமாள், தென்கரை மூலநாதர் சுவாமி, திருவேடகம் ஏடக நாத சுவாமி ஆலயத்திலும், சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!