அயோத்தி ஆலய குடமுழுக்கு: மதுரை கோயில்களில் சிறப்பு பூஜைகள்

அயோத்தி ஆலய குடமுழுக்கு: மதுரை கோயில்களில் சிறப்பு பூஜைகள்
X

மதுரை பழங்காநத்தம் கோதண்டராம ஸ்வாமி ஆலயத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

அயோத்தி ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அயோத்தி ராமர் கோவில் ராமர் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு நிகழ்ச்சியாக, மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரத்தில் உள்ள500 ஆண்டுகள் மிக பழமையான கோவிலான கோதண்ட ராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் பஜனை பாடல்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு அருளாசி பெற்றனர் .

மேலும், அயோத்தி ராமர் கோவில் ராமர் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்தை நேரலையில் காண திரை அமைக்கப்பட்டு பொதுமக்கள் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதனை தொடர்ந்து இன்று மாலை திருவிளக்கு பூஜையும் நடைபெறும் எனவும் ஸ்ரீ ராம பக்த சபா சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருவேடத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு நேரலை பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை கரை துர்க்கை அம்மன் கோவில் முன்புஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாஜகவினர் சிறப்பு யாகம் நடத்தி கும்பாபிஷேகத்தை எல்.இ.டி.மூலம் நேரலை செய்தனர்.

மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் மண்டல், திருவேடகம் கிளை பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story